நீதிபதிகள் சொத்து விவரத்தை வெளியிடுவதற்கான விதிகள்: நாடாளுமன்ற குழுவிடம் ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், ‘நீதித்துறை செயல்பாடுகள் மற்றும் அதன் சீர்திருத்தங்கள்’ குறித்த சட்டம் மற்றும் பணியாளர் துறைக்கான நிலைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது. பாஜ எம்பி சுஷில் குமார் மோடி தலைமையிலான குழுவின் இந்த அறிக்கையில், ‘அனைத்து அரசியலமைப்பு நிறுவனங்களிலும் பணியாற்றும் அரசு பணியாளர்களின் சொத்து விவரங்கள், கடன் விவரங்களை தாக்கல் செய்வது பொதுவான நடைமுறை. இத்தகவலை பொதுமக்கள் தெரிந்து கொள்ள உரிமை உண்டு. அதன்படி, எம்பி, எம்எல்ஏ தேர்தலில் போட்டியிடுபவர்கள் சொத்துக்களை கட்டாயம் தெரிவிக்கும் நடைமுறை இருக்கையில், உச்ச நீதிமன்றம் மற்றும் 25 உயர் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் தங்கள் சொத்து விவரத்தை பொது வெளியில் வெளியிடுவது, நீதி அமைப்பின் மீது அதிக நம்பிக்கையையும் நம்பகத்தன்மையையும் கொண்டு வரும்’ என கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சட்ட அமைச்சகத்தின் நீதித்துறை அறிக்கை தர நிலைக்குழு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சொத்துக்களை கட்டாயம் வெளியிட வேண்டுமென்பதற்கான சட்டப்பூர்வ விதிகளை உருவாக்குவதற்கான பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றப் பதிவாளர்களுடன் ஆலோசனை தொடங்கப்பட்டுள்ளது. அதன் பதிலுக்காக காத்திருக்கிறோம்’ என கூறப்பட்டுள்ளது.

The post நீதிபதிகள் சொத்து விவரத்தை வெளியிடுவதற்கான விதிகள்: நாடாளுமன்ற குழுவிடம் ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: