சிஆர்பிஎப் மையத்தில் பல்வேறு பதவிகளுக்காக பணி நியமன ஆணை: ஒன்றிய அமைச்சர் வழங்கினார்

ஆவடி: ஆவடி சிஆர்.பி.எப் மையத்தில் ரோஜ்கர் மேளாவில் கலந்து காண்டு பல்ேவறு பதவிகளுக்காக பணி நியமன ஆணையை ஒன்றிய அமைச்சர் நாராயணசாமி வழங்கினார். நாடு முழுவதும் உள்ள 47 இடங்களில் ரோஜ்கர் மேளா நேற்று நடந்தது. இதில், ஆவடி சிஆர்பிஎப் மையத்த்தில் நடைபெற்ற ரோஜ்கர் மேளா 12வது தவணை வேலைவாய்ப்புத் திருவிழாவில் ஒன்றிய அரசின் வருவாய்த் துறை, உள்துறை அமைச்சகம், உயர்கல்வித் துறை, அணுசக்தித் துறை, பாதுகாப்புத் துறை, நிதிச் சேவைத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பழங்குடியினர் நல அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகம் உள்ளிட்டவற்றில் இருக்கக்கூடிய பல்வேறு பதவிகளுக்கு, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகளில் சேரவுள்ளனர்.

அவ்வாறு சேரவுள்ள அந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு, பணி நியமன ஆணைகளைப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அந்த வகையில் ஆவடி சிஆர்பிஎப் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர், நாராயணசுவாமி கலந்து கொண்டு பணி ஆணைகளை வழங்கினார். இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பணி ஆணைகளை பெற்றுக்கொண்டனர். இதில் சிஆர்பிஎப் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

The post சிஆர்பிஎப் மையத்தில் பல்வேறு பதவிகளுக்காக பணி நியமன ஆணை: ஒன்றிய அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: