கள்ளக்குறிச்சி ஆபத்தான நிலையில் இருந்த 5 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆபத்தான நிலையில் இருந்த 5 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தகவல் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதை அருந்தியவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் தற்போது பலி எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளவர்களை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைக்குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதன் பிறகு மாவட்ட ஆட்சியர் கூறுகையில், கள்ளக்குறிச்சி ஆபத்தான நிலையில் இருந்த 5 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 39 பேரின் உடல்கள் தகனம் மற்றும் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. விஷச் சாராயம் அருந்தியவர்களை கண்டறியும் பணியை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் இருந்த 55 பேர் இதுவரை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

 

The post கள்ளக்குறிச்சி ஆபத்தான நிலையில் இருந்த 5 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: ஆட்சியர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: