தெப்பக்காடு- மசினகுடி சாலையோர வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடு அமைக்கும் பணி துவங்கியது

கூடலூர் : முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு மசினகுடி சாலை ஒர வனப்பகுதிகளில் வனத்துறையினர் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் தீதடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகளை துவக்கியுள்ளனர்.தற்போது மழைக்காலம் முடிவடைந்து பனிக்காலமும் முடிவடையும் நிலையில், பகல் நேரத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக வனப்பகுதியில் புல்வெளிகள் காய்ந்து எளிதில் தீ பிடிக்கும் நிலைக்கு மாறியுள்ளது.

வனப்பகுதியில் வன உயிரினங்களின் தாகம் தீர்க்க அமைக்கப்பட்டுள்ள தரை மட்ட தொட்டிகளில் ட்ராக்டர் டாங்கர் மூலம் தண்ணீர் நிரப்பும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அடுத்து வரும் கோடை காலத்தில் காட்டுத்தீ ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியின் ஊடாக செல்லும் பிரதான சாலைகள் மற்றும் வனப்பகுதி உள் சாலைகளில் சாலை ஒரத்தில் காய்ந்த நிலையில் உள்ள புற்களை செயற்கை தீ மூட்டி எரித்து தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகளை வனத்துறையினர் துவக்கி உள்ளனர்.
முதல் கட்டமாக தெப்பக்காடு மசினகுடி சாலையின் இருபுறமும் சுமார் 5 மீட்டர் அகலத்திற்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.

The post தெப்பக்காடு- மசினகுடி சாலையோர வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடு அமைக்கும் பணி துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: