தென்ஆப்ரிக்க டி.20 தொடர் பைனல்: சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் சாம்பியன்: 2வது முறையாக பட்டம் வென்று அசத்தல்

கேப்டவுன்: 6 அணிகள் பங்கேற்ற தென்ஆப்ரிக்கா டி.20 தொடர் (எஸ்ஏ 20) 2வது சீசனின் இறுதி போட்டி நேற்றிரவு கேப்டவுனில் நடந்தது. இதில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்- டர்பனின் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணியில் டேவிட் மாலன் 6 ரன்னில் வெளியேற மற்றொரு தொடக்க வீரர் ஜோர்டான் ஹெர்மன் 26 பந்தில் 42 ரன் அடித்தார். டாம் ஆபெல் 34 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 55ரன் எடுத்து வெளியேற, கேப்டன் மார்க்ரம் நாட்அவுட்டாக 42 (26 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 30 பந்தில், 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 56 ரன் விளாசினர்.

சன்ரைசர்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 204 ரன் குவித்தது.பின்னர் களம் இறங்கிய டர்பன்ஸ் அணியில் டி காக் 3, பிரிட்ஸ்கி 18, ஸ்மட்ஸ் 1, வியான் முல்டர் 38, ஹென்றி கிளாசன் 0 பிரிட்டோரியஸ் 28, கேப்டன் கேசவ் மகாராஜ் 5, ஜூனியர் டாலா 15 ரன்னில் அவுட் ஆகினர். 17 ஓவரில் 115 ரன்னுக்கு டர்பன்ஸ் ஆல்அவுட் ஆனது. இதனால் 89 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ், சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டது. அந்த அணியின் பவுலிங்கில் மார்கோ ஜான்சன் 5, டேனியல் வோரால், ஒட்னியல் பார்ட்மேன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். டாம் ஆபெல் ஆட்டநாயகன் விருதும், டர்பன்ஸ் அணியின் கிளாசென் (447ரன்) தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

The post தென்ஆப்ரிக்க டி.20 தொடர் பைனல்: சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் சாம்பியன்: 2வது முறையாக பட்டம் வென்று அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: