தா.பழூர் அருகே கோடாலிகருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி 63வது ஆண்டுவிழா

தா.பழூர், பிப். 11:அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக முதல்வர உத்தரவிற்கினங்க, பள்ளிக் கல்வித்துறையின் 2023 – 2024 ஆண்டிற்கான 63வது ஆண்டு விழா, பள்ளி தலைமை ஆசிரியர்சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்துகொண்டு சிறப்புறையாற்றினார். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினார். தொழிற்கல்வி மாணவர்களுக்கு ரூ.500 மதிப்புள்ள உபகரணங்களை எம்எல்ஏ வழங்கினார்.

நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் சுதா இளங்கோவன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் விமல்ராணி, மாவட்ட பிரதிநிதி சீனிவாசன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் சம்மந்தம், குணசீலன், தங்கபிரகாசம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், என பலரும் கலந்துகொண்டனர்.

The post தா.பழூர் அருகே கோடாலிகருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி 63வது ஆண்டுவிழா appeared first on Dinakaran.

Related Stories: