கோவையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கலந்துரையாடல்

 

கோவை, பிப். 11: நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் கோவையில் தொழில்துறையினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களிடமும், பொதுமக்களிடமும் பரிந்துரைகளை பெற்றனர். கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் `உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற நாடாளுமன்ற தேர்தல் கருத்து கேட்டு, மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரும், எம்பியுமான, கனிமொழி தலைமை தாங்கி, மனுக்களை பெற்றார்.

இதில், கோவையில் உள்ள பல்வேறு தொழில்அமைப்புகள், சங்கங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் சங்கங்கள், பஞ்சாலை அமைப்புகள், தங்கநகை தொழில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை மனுவாக அளித்தனர்.

இக்குழுவில் திமுக விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி, அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்பி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்பட பலரும் இடம்பெற்றிருந்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக் (மாநகர்), தளபதி முருகேசன் (கோவை தெற்கு), தொண்டாமுத்தூர் ரவி (கோவை வடக்கு), மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தனர்.

The post கோவையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கலந்துரையாடல் appeared first on Dinakaran.

Related Stories: