கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்!

சென்னை: கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் சென்று விடு திரும்பியவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறை மற்றும் நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் அதிக வாகனங்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்கின்றன.

இதனால் கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர், மறைமலை நகர் என சுமார் 10 கிலோ மீட்டர்க்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

சென்னை புறநகர் பகுதியான சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில், செங்கல்பட்டு ஆகிய ஊர்கள் அசுர வேகத்தில் வளர்ந்து சென்னைக்கு அடுத்தப்படியாக அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட நெருக்கடியான பகுதியாக மாறியுள்ளது. மேலும் தொழிற்சாலைகள், என்ஜினீயரிங் கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள், கலை-அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்கா போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள், பெரிய ஓட்டல்கள், வணிக நிறுவன கடைகளும் அதிக எண்ணிக்கையில் இருக்கிறது.

அதிக அளவில் பயணிகள் கூட்டம் சொந்த ஊர்களுக்கு செல்வதால் தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் சீர்செய்து வருகின்றனர். மேலும் நாளை விடுமுறை நாட்கள் என்பதால் நாளை முதல் சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தாம்பரம், பெருங்களத்தூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

The post கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்! appeared first on Dinakaran.

Related Stories: