அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டி 4 போட்டிகளில் 8 அணிகள் விளையாடின

 

கரூர், பிப். 10: கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 2வது அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டியின் மூன்றாம் நாளான நேற்று நான்கு போட்டிகளில் எட்டு அணிகள் கலந்து கொண்டு விளையாடின. கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் பிஎன்ஐ மற்றும் சிஐஐ யங் இந்தியன்ஸ் ஆகியவை இணைந்து கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் பிப்ரவரி 7ம்தேதி முதல் 11ம்தேதி வரை அகில இந்திய பெண்கள் கூடைபந்து போட்டிகள் நடைபெறுகிறது.

பிப்ரவரி 7ம்தேதி மாலை முதல் போட்டி துவங்கியது. தொடர்ந்து, அடுத்தடுத்து அணிகளுக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று மாலை ஈஸ்டர்ன் ரயில்வே அணிக்கும், சட்டீஸ்கர் ஸ்டேட் அணிக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், ஈஸ்டர்ன் ரயில்வே கொல்கத்தா அணி 83க்கு 49 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து, கேரளா இபி அணிக்கும், சென்னை இன்கம்டாக்ஸ் அணிக்கும் போட்டி நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கேரளா இபி அணி 66க்கு 42 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, சேலம் செயின்ட் ஜோசப் அகாடமி அணிக்கும், மும்பை சென்ட்ரல் ரயில்வே அணிக்கும், இதே போல், செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணிக்கும், டெல்லி நார்தர்ன் ரயில்வே அணிக்கும் அடுத்தடுத்து போட்டிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

The post அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டி 4 போட்டிகளில் 8 அணிகள் விளையாடின appeared first on Dinakaran.

Related Stories: