வாளையாரில் யானைகளின் உயிரிழப்பை தடுக்கும் வகையில் நவீன கட்டுப்பாட்டு அறை: அமைச்சர் மதிவேந்தன் தொடங்கிவைத்தர்

கோவை: கோவை எட்டிமடை – வாளையாறு இடையேயான ரயில்வே தண்டவாளத்தில் ரயில் மோதி யானை உயிரிழக்கும் நிகழ்வை தடுக்க செயற்கை நுண்ணறிவு வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தபட்டுள்ளது. ரயில்வே தண்டவாளம் அருகே வரும் யானைகளை விரட்டும் அதிநவீன டிரோன் கேமராக்களும் செயல்பாட்டுக்கு வந்தது

கேரளாவில் பாலக்காடு பகுதியில் இருந்து தமிழகத்தின் கோவைக்கு வரகூடிய ரயில்கள் வாளையாறு – எட்டிமடை வழியாக செல்லும். இதற்கு A, B என 2 தண்டவாளங்கள் உள்ளது. இந்த இரண்டும் வனப்பகுதிக்குள் வருவதால் அடிக்கடி யானை மீது ரயில் மோதி விபத்து ஏற்படுகிறது. கடந்த 2008 முதல் தற்போது வரை 11 யானைகள் ரயில் மோதிய விபத்தில் இறந்துள்ளது. இதனை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், வனபகுதியில் முகாம் அமைத்து வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டாலும் விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த சூழலில் இதனை கட்டுபடுத்த நவீன AI தொழில் நுட்பத்துடன் கூடிய 12 கேமராக்கள் பொறுத்தபட்டுள்ளது. அதற்கான பணியை இன்று அமைச்சர் மதிவேந்தன் தொடங்கிவைத்தர்.

இந்த கேமராவின் செயல்பாடானது, 7 கிலோமீட்டர் தொலைவிற்கு வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து, அங்கிருந்து வாளையாரில் அமைக்கபட்டுள்ள கட்டுபாட்டு மையத்திற்கு புகைபடங்கள் மற்றும் வீடியோ தகவல்களை அனுப்பும் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் அந்த தகவல்களை கட்டுபாட்டு அறையில் உள்ள பணியாளர்கள் கவனிக்க வில்லை என்றால் சைரன் ஒலி எழுப்பபடும். அதே சமயம் ரயில்வே துறையில் உள்ள கட்டுபாட்டு அறைக்கும் இங்கிருந்து தகவல் கொடுக்கப்படும்.

அதன் அடிப்படையில் யானைகளின் உயிரிழப்பை தடுப்பதற்கான திட்டமானது இன்று தொடங்கபட்டுள்ளது. ரூ.7.24 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டத்தை தமிழ்நாடு செய்துள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக AI தொழில்நுட்பத்துடன் கேமராக்கள் மற்றும் நவீன கட்டுப்பாட்டு அறை பணிகள் முடிக்கபட்டு இன்று தொடங்கி வைக்கபடுள்ளது.

The post வாளையாரில் யானைகளின் உயிரிழப்பை தடுக்கும் வகையில் நவீன கட்டுப்பாட்டு அறை: அமைச்சர் மதிவேந்தன் தொடங்கிவைத்தர் appeared first on Dinakaran.

Related Stories: