அமிர்தேஸ்வரர் கோயிலில் தை மாத பிரதோஷ பூஜை

பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.8: பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பையர்நத்தம் கிராமம் மயிலைமலை பாலமுருகன் கோயில் அடிவாரத்தில் அமிர்தேஸ்வரர், அன்னை அமிர்தாம்பிகை கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று, தைமாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நந்தியம் பெருமானுக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர், எலுமிச்சை, தயிர், திரவிய பொடிகளை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நந்தி பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. இதில் பையர்நத்தம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

The post அமிர்தேஸ்வரர் கோயிலில் தை மாத பிரதோஷ பூஜை appeared first on Dinakaran.

Related Stories: