அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் கெஜ்ரிவால் ஓடி ஒளிவது ஏன்?.. ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லெகி கேள்வி

டெல்லி: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் கெஜ்ரிவால் ஓடி ஒளிவது ஏன்? என ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லெகி கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி அரசின் மதுபான கொள்கை விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி தலைவருமான கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்ைல. இவ்விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவால் அமலாக்கத்துறை முன் ஆஜராகாதது குறித்து நீதிமன்றத்தை அமலாக்கத்துறை அணுகியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லெகி; கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. சுமார் 12 மணி நேரம் புலனாய்வு துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு மோடி பதில் அளித்தார். தற்போது டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாமல் ஓடி ஒளிந்து வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி போன்று விசாரணையை அவர் நேரில் சந்திக்க வேண்டும். ஆனால் கெஜ்ரிவால் நாடகமாடி வருகிறார். ஆம் ஆத்மி அரசின் அடுத்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. டெல்லி குடிநீர் வாரிய நிதியில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு லெகி தெரிவித்தார்.

The post அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் கெஜ்ரிவால் ஓடி ஒளிவது ஏன்?.. ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லெகி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: