அதிமுக கூட்டணிக்காக பாஜக கதவுகள் திறந்தே உள்ளன: அமித்ஷா அழைப்பால் பரபரப்பு

டெல்லி: தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் திமுக முதல் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார். அதன்பின்னர் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட உள்ளது.

அதேநேரத்தில், அதிமுக, பாஜ கட்சிகள் இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் தவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக நாளிதழ் ஒன்றுக்கு அமித் ஷா பேட்டியளித்தார். அப்போது; தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். அதிமுக கூட்டணிக்காக பா.ஜ.க. கதவுகள் திறந்தே உள்ளன. பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக திட்டவட்டமாக கூறி வரும் நிலையில் அமித் ஷா அழைப்பால் பரபரப்பு நிலவி வருகிறது.

ஏற்கனவே பா.ஜ.க.வுக்காக ஜி.கே.வாசன், எடப்பாடி பழனிசாமியுடன் பேசி வருகிறார். பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து அதிமுக 2-ம் கட்ட தலைவர்கள் பேசிய நிலையில் கூட்டணிக்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.

The post அதிமுக கூட்டணிக்காக பாஜக கதவுகள் திறந்தே உள்ளன: அமித்ஷா அழைப்பால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: