முத்துப்பேட்டை அருகே கீழப்பாண்டி அரசு பள்ளியில் வானவில் மன்ற விழா

 

முத்துப்பேட்டை, பிப். 7: முத்துப்பேட்டை அடுத்த கீழப்பாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் உமாராணி தலைமை வகித்தார். அறிவியல் செயல்பாடுகளை மாணவர்கள் முன் செய்து காட்டி, மாணவர்களையும் செயல்பாட்டில் ஒருங்கிணைப்பாளர் திவ்யா ஈடுபடுத்தினார். மேலும் கைக்குள் இருக்கும் பிரிட்ஜ், இஸ்திரி பெட்டி என்ற செயல்பாட்டு மூலம் குளிர்ச்சி, வெப்பம் நிகழ்வுகளை செய்து காட்டினார்.

டப் டப் சத்தம் என்ற செயல்பாட்டு மூலம் ஹைட்ரஜன் வாயு டப் டப் சத்தம் எப்படி ஒலி எழுப்புகிறது, இழுத்தல், தள்ளுதல் விசை செயல்பாடுகளை மாணவர்களைக் கொண்டும், எண்கள் கணிதத்தின் கண்கள் என்ற கணித செயல்பாட்டினையும், வாழ்வியல் கணிதம் என்ற செயல்பாட்டில் மாணவர்கள் வங்கியில் பணம் செலுத்த வேண்டிய படிவத்தினை நிரப்புதல் செயல்பாட்டையும் செய்து காட்டினார். இதில் ஆசிரியர்கள் மதன்குமார், பைரவி கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.

The post முத்துப்பேட்டை அருகே கீழப்பாண்டி அரசு பள்ளியில் வானவில் மன்ற விழா appeared first on Dinakaran.

Related Stories: