ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் வருண் குமார் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

ஹிமாச்சல்: ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் வருண் குமார் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம்பெண் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு ஞானபாரதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 17 வயது பெண்ணை, காதலிப்பதாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 வருடங்களாக பழகி வந்த நிலையில், திருமணம் செய்யமால் மோசடி செய்ததாக இளம்பெண் புகார் தெரிவித்துள்ளார். 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அணியில் வருண் குமார் இடம்பெற்றிருந்தார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் வருண் குமார் இடம்பெற்றிருந்தார். வருண் குமார் 2021ம் ஆண்டில் அர்ஜுனா விருது பெற்றுள்ளார். வருண்குமார் மீது போக்சோ, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வருணை கைது செய்ய பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் இடத்திற்கு பெங்களூரு போலீசார் விரைந்துள்ளனர்.

இந்திய ஹாக்கி அணியின் வீரராக பார்க்கப்படுபவர் வருண்குமார், அவருக்கு அர்ஜுனா விருது கிடைத்துள்ளது. முதல் முறையாக தனது ஆட்டத்தை 2017ல் இந்திய அணிக்காக தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏசியன் கேம்ஸ் உள்ளிட்ட போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பரிசுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் மீது பெங்களூரு காவல் நிலையத்தில் போக்சோ, மோசடி ஆகிய புகாரை அளித்துள்ளார்.

புகாரில் தன்னை இன்ஸ்டாகிராம் மூலம் சந்தித்த வருண்குமார் தன்னுடன் பழகி வந்ததாகவும், அந்த சமயத்தில் பலமுறை தன்னுடன் உடல் உறவு கொண்டதாகவும் புகார் அளித்துள்ளார். முதல் முறையாக 2019ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் தன்னை அறிமுகம் செய்து பெங்களூருவில் பயிற்சிக்கு வந்ததாகவும் அப்பொழுது முதல் தன்னுடன் பழகியதாகவும், திருமணம் செய்துகொள்வதாக கூறி பலமுறை தன்னுடன் பாலியல், உடல் உறவு கொண்டதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தற்போது திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி நிலையில் தற்போது புறக்கணித்து வருவதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பெங்களூரு போலீசார் இந்திய ஹாக்கி அணி வீரர் வருண்குமார் மீது போக்சோ மற்றும் மோசடி வழக்கு செய்து அவரை கைது செய்வதற்காக தற்போது அவருடைய வீட்டிற்கு விரைந்துள்ளனர்.

The post ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் வருண் குமார் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: