கொடிநாள் நிதி வசூல் செய்த அலுவலர்களுக்கு பதக்கம் திருவானைக்கோவில் அடிமனை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்

 

திருச்சி, பிப்.6: திருவானைக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் கோயில் அடிமனை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரதீப்குமாரிடம் மனு அளித்தனர். திருச்சி மாவட்டம் திருவானைகோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் சார்பாக பத்மநாபன் என்பவர், திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ரங்கம் கோயிலை சுற்றி வசித்து வரும் மக்கள் சந்தித்த அடிமனை பிரச்சனை தற்போது திருவானைக்கோவிலையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பொதுமக்கள் இந்த பிரச்னையை சந்தித்து வருகின்றனர்.

திருவானைகோவிலை சுற்றி உள்ள 100க்கும் மேற்பட்ட சர்வே இடங்கள் கோயிலுக்கு சொந்தமானது என்றும், மேற் சொன்ன இடங்களில் வசிப்பவர்கள் தங்களுடைய இடத்தினை வேறொரு நபருக்கு கிரையம் கொடுக்க முடியாமலும், கிரையம் பெற முடியாமலு், வங்கியில் வீட்டுக்கடன் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆனால் இந்த இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் அவர்கள் கிரையம் பெற்ற நாளில் இருந்து வீட்டுவரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி, தொழில்வரி மற்றும் மின்சார கட்டணம் ஆகியவற்றை முறையாக பல ஆண்டுகளாக செலுத்தி வருகிறோம். இந்நிலையில் இந்த இடம் கோயிலுக்கு சொந்தமானது என்று கூறுவது ஏற்புடையது அல்ல. எனவே பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமான சொத்துக்களின் ஆவணங்களை பரிசீலனை செய்தும், திருக்கோயில் ஆவணங்களை பரிசீலனை செய்தும், எங்களுக்கு சொந்தமான இடத்தை கிரையம் பெறுவதற்கும், கொடுப்பதற்கும் மற்றும் பத்திரப்பதிவுகள் செய்வதற்கும் வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கொடிநாள் நிதி வசூல் செய்த அலுவலர்களுக்கு பதக்கம் திருவானைக்கோவில் அடிமனை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: