ஈ.டி கதவை தட்ட வேண்டாம் நாங்கள் திறந்தே வைத்துள்ளோம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

வேலூர்: ‘அமலாக்கத்துறை (ஈடி) கதவை தட்ட வேண்டாம். கதவுகள் அவர்களுக்காக திறந்தே வைத்துள்ளோம்’ என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார். வேலூர் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லூர் கிராமம் முதல் பாலாறும் இணையும் வரையுள்ள பாண்டியன் மடுவு கால்வாயை ரூ.6.32 கோடியில் சீரமைக்கும் பணியை அமைச்சர் துரைமுருகன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசியல் கட்சியை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம், அல்லது எந்த கட்சியிலும் இணையலாம். அதில் என்ன இருக்கிறது.

என்னை பொருத்தவரை அமலாக்கத்துறை (ஈடி) கதவை தட்ட வேண்டாம். அவர்களுக்கு அந்த கஷ்டத்தை கொடுக்க மாட்டோம். கதவுகள் அவர்களுக்காக திறந்தே வைத்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து எழும் வதந்திகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. பிறகு துரைமுருகன் சொன்னதாக ஒன்னு போட்டு குட்டையை குழப்பிவீடுவீர்கள்.

* அண்ணாமலை என்ன வல்லுனரா?
பொருளாதாரத்தில் தமிழகம் பின்தங்கி உள்ளதாக அண்ணாமலை கூறியது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘அவர் என்ன வந்து பார்த்தாரா? பெரிய பெரிய வல்லுனர்களே எங்களுக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்’ என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

The post ஈ.டி கதவை தட்ட வேண்டாம் நாங்கள் திறந்தே வைத்துள்ளோம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: