காஞ்சி சங்கரா பல்நோக்கு மருத்துவமனையில் ரூ.60 லட்சம் மதிப்பில் ரத்த சேமிப்பு வங்கி திறப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரா பல்நோக்கு மருத்துவமனையில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் ரத்த சேமிப்பு வங்கியை ஹூண்டாய் டிரான்சிஸ் லேயர் நிறுவன நிர்வாக இயக்குநர் குவாங்கோ லீ திறந்து வைத்தார். காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்நோக்கு மருத்துவமனையில், ஒரே நேரத்தில் 300 பேரின் ரத்த மாதிரிகளை சேமித்து வைக்கும் வகையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான ரத்த சேமிப்பு வங்கி திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பணி ஓய்வுபெற்ற விங் கமாண்டர் சங்கர் தலைமை தாங்கினார். மருத்துவமனையின் தலைமை நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி, சங்கர கிருபா மருத்துவ அறக்கட்டளையின் பொருளாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்நோக்கு மருத்துவமனையின் செயல் அலுவலர் நந்தகுமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இதில், ஹூண்டாய் டிரான்சிஸ் லேயர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குவாங்கோ லீ பங்கேற்று, ரத்த சேமிப்பு வங்கியை திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது, மருத்துவர் அமுதவல்லி தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்த சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்வில் ஹூண்டாய் டிரான்சிஸ் லேயர் நிறுவன துணை பொது மேலாளர் மகேஷ், மேலாளர் வெங்கடேஷ், மருத்துவனையின் செய்தித் தொடர்பாளர் ஸ்ரீராம், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மருத்துவமனையின் ரத்த பரிசோதனை அலுலலர் மோகன் நன்றி கூறினார்.

The post காஞ்சி சங்கரா பல்நோக்கு மருத்துவமனையில் ரூ.60 லட்சம் மதிப்பில் ரத்த சேமிப்பு வங்கி திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: