சென்னை கிழக்கு மாவட்ட திமுக கநிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம்: பெரியார் திடலில் இன்று நடக்கிறது

சென்னை: சென்னை கிழக்கு மாவட்டம், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட துறைமுகம், எழும்பூர் மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளை சார்ந்த (பிஎல்ஏ- 2) பாகநிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம், பெரியார் திடலில் இன்று (4ம் தேதி) மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

நிகழ்வில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் அ.வெற்றியழகன், இ.பரந்தாமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.மணிமுடி, தமிழ்நாடு சேமிப்பு கிடங்குகள் வாரிய தலைவர் ப.ரங்கநாதன், தொகுதி பார்வையாளர்கள் ஓ.நாகலிங்கம், ஜி.பிரபு, வே.கவுதமன், சட்டத்துறை துணை செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன், கொள்கை பரப்பு துணை செயலாளர் தமிழன் பிரசன்னா, அவை தலைவர் கோ.ஏகப்பன், புனிதவதி எத்திராசன் எம்.சி, இசட்.ஆசாத் எம்.சி, ஜி.எம்.தேவன், பகுதி செயலாளர்கள் வி.சுதாகர், சொ.வேலு எம்.சி, கூ.பி.ஜெயின் எம்.சி, வே.வாசு, எஸ்.முரளி, எஸ்.ராஜசேகர், கே.எஸ்.எம்.நாதன், வே.உமாகாந்த், என்.பி.எம்.சேக் அப்துல்லா, பரிதி இளம்சுருதி எம்.சி, எம்.விஜயகுமார், புரசை கோ.மணி, டி.வி.செம்மொழி, எம்.சி, அ.நிர்மலா தேவி, சாவித்திரி வீரராகவன், சுதா தீனதயாளன் எம்.சி, கலைச்செல்வி, மண்டல குழு தலைவர்கள் ப.ராமலு, சரிதா மகேஷ் குமார், இப்ராகிம் கனி, வானவில் விஜய், ராஜேஸ்வரி தர், தாமோதரன், விஜயகுமார், வினாயகம், பிரதீப், சம்பத்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கின்றனர். இறுதியில், 58வது வட்ட செயலாளர் வி.விஜயகுமார் நன்றி கூறுகிறார்.

The post சென்னை கிழக்கு மாவட்ட திமுக கநிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம்: பெரியார் திடலில் இன்று நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: