அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில்: பிப்ரவரி 14ல் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!!

ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபி அருகே முரேகாவில் 55 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்ட இந்து கோயில் கட்டப்படுகிறது. கடந்த 2018 பிப்ரவரியில் இக்கோயில் கட்டுமானப் பணியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உலகம் முழுவதும் சுமார் 1,200 இந்து கோயில்களை நிறுவி, பராமரித்து வரும் பாப்ஸ் (பிஏபிஎஸ்)அமைப்பு அபுதாபி கோயிலையும் கட்டி வருகிறது. இக்கோயிலில் கிருஷ்ணன், சிவன், ஐயப்பனின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இக்கோயில் 2024 பிப்ரவரி 14-ம் தேதி, பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.கோவிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

The post அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில்: பிப்ரவரி 14ல் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!! appeared first on Dinakaran.

Related Stories: