40,000 சாதாரண ரயில் பெட்டிகள் ‘வந்தே பாரத்’ தரத்தில் புதுப்பிக்கப்படும்: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: 40,000 சாதாரண ரயில் பெட்டிகள் ‘வந்தே பாரத்’ தரத்தில் புதுப்பிக்கப்படும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும். அப்போது உரையாற்றிய அவர்; புதிய சாலை, ரயில், துறைமுகங்களுக்கான வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும். துறைமுகங்கள், தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் 3 முக்கிய ரயில்வே பெருவழித்தடங்கள் அமைக்கப்படும். 3 சரக்கு பொருளாதார ரயில்வே வழித்தடம் விரைவில் அமைக்கப்படும்.

விமான நிறுவனங்கள் புதிதாக 1,000 விமானங்கள் வாங்க உள்ளன. உதான் திட்டத்தில் 550 தடங்களில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் விமான நிலையங்கள் 149ஆக அதிகரிக்கப்படும். நாட்டில் புதிய விமான நிலையங்கள் மற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. 40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் திட்ட பெட்டிகளாக மாற்றப்படும். பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் இவ்வாறு கூறினார்.

The post 40,000 சாதாரண ரயில் பெட்டிகள் ‘வந்தே பாரத்’ தரத்தில் புதுப்பிக்கப்படும்: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.

Related Stories: