தக்கலை அருகே போலீஸ்- பொதுமக்கள் வாலிபால் போட்டி

 

தக்கலை, ஜன.31 : தக்கலை போலீஸ் உட்கோட்ட அளவிலான போலீஸ் – பொதுமக்கள் நல்லுறவு வாலிபால் போட்டி மூலச்சல் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. போலீஸ் தரப்பில் 4 அணியும், பொதுமக்கள் தரப்பில் 4 அணியும் மோதின. இப்போட்டியை தக்கலை டிஎஸ்பி உதய சூரியன் தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் மூலச்சல் ஏ அணி முதலிடமும், போலீஸ் அணி இரண்டாம் இடமும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு தக்கலை டிஎஸ்பி உதய சூரியன் பரிசுகளை வழங்கினார். தக்கலை இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர்கள் பேச்சிமுத்து பாண்டியன், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post தக்கலை அருகே போலீஸ்- பொதுமக்கள் வாலிபால் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: