நாடாளுமன்ற தேர்தலில் பாமக நிலைப்பாடு, கூட்டணி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விரைவில் அறிவிப்பார்: அன்புமணி ராமதாஸ் தகவல்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் பாமக நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விரைவில் அறிவிப்பார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தகவல் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் 2024 – 25ம் ஆண்டிற்கான வேளாண் நிழல் நிதி நிலை அறிக்கை இன்று பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவ தலைவர் கோக்கா மணி ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. 110 சிறப்பு அம்சங்களுடன், ரூ.80,000 கோடிக்கான பாமக வேளாண் நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடப்பட்டது. குறிப்பாக 60,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும்.

அதேபோல பாசன திட்டங்களுக்கு சுமார் 20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது, நாடாளுமன்றத் தேர்தலில் பாமக நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விரைவில் அறிவிப்பார் என்று அன்புமணி தெரிவித்தார். வருகின்ற பிப்.1ம் தேதி சென்னையில் பாமக கூட்டம் நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தில் அநேகமாக இதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

The post நாடாளுமன்ற தேர்தலில் பாமக நிலைப்பாடு, கூட்டணி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விரைவில் அறிவிப்பார்: அன்புமணி ராமதாஸ் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: