ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்: டி.ஆர்.பாலு பேட்டி

டெல்லி: ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிறகு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இடையூறு ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். பா.ஜ.க. ஆட்சியில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் கவனஈர்ப்பு தீர்மானங்கள் எதுவும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தக்கூடாது:

இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமை சட்டத்தை தற்போதைய வடிவில் செயல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தினோம். இந்திய குடியுரிமை சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். 2019-ல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை கட்டப்படாமல் உள்ளது குறித்து அரசு விளக்கம் தர வேண்டும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

The post ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்: டி.ஆர்.பாலு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: