ஆர்எஸ்எஸ், பாஜவின் சித்தாந்தம் வன்முறை, வெறுப்பை பரப்புகிறது: பீகாரில் ராகுல் குற்றச்சாட்டு

கிஷன்கஞ்ச்: ‘ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவின் சித்தாந்தங்கள் நாட்டில் வன்முறையையும், வெறுப்பையும் பரப்புகின்றன’ என பீகாரில் நுழைந்த இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை நேற்று காலை கிஷன்கஞ்ச் வழியாக பீகார் மாநிலத்திற்குள் நுழைந்தது. அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், ‘‘ஆர்எஸ்எஸ், பாஜவின் சித்தாந்தங்கள் நாட்டில் வன்முறையையும், வெறுப்பையும் பரப்புகின்றன.

அவர்கள் மக்களை மதம், ஜாதி மற்றும் மொழியின் பெயரால் சண்டையிட தூண்டுகின்றனர். நம் சகோதரர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இதுதான் அவர்கள் நாட்டில் உருவாக்கி உள்ள சூழல். மக்களை ஒன்றிணைக்க நாங்கள் உழைக்கிறோம். வெறுப்பு சந்தையில் அன்பின் கடைகளை திறக்க விரும்புகிறோம்’’ என்றார். மாலையில் அராரியா மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் உள்ளூர் கோயிலில் பூஜை செய்தார்.

The post ஆர்எஸ்எஸ், பாஜவின் சித்தாந்தம் வன்முறை, வெறுப்பை பரப்புகிறது: பீகாரில் ராகுல் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: