பிரேமலதா ஏற்றிய போது பாதியில் அறுந்து விழுந்த தேமுதிக கொடி

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அவர் மறைந்து ஒரு மாதம் ஆனதை தொடர்ந்து, நேற்று முதல் தமிழகம் முழுவதும் கொடி முழுக்கம்பத்தில் ஏற்றப்பட வேண்டும் என நிர்வாகிகளுக்கு பிரேமலதா அறிவுறுத்தியிருந்தார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று கொடியை முழு கம்பத்தில் பறக்கவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வானத்தை பார்த்து கும்பிட்டு பிரேமலதா கொடியேற்றியபோது உயரே சென்ற கொடி பாதியில் அறுந்து கீழே விழுந்தது.

இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அக்கொடியை மீண்டும் கட்டி மறுபடி பறக்க விடப்பட்டது. இதைதொடர்ந்து பிரேமலதா பேட்டியளிக்கையில், ‘‘ஏற்றும்போது கயிறு அறுந்து கொடி கீழே விழுந்து விட்டது. ஒரு தடைக்கு பிறகுதான் ஒரு மிகப்பெரிய வெற்றி இருக்கிறது என்று சொல்வார்கள். அதனால் கட்சியின் கொடி கயிறு அறுந்தது, இதுவரை இருந்த எங்களுடைய அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்தது. இனி தேமுதிக கொடி பட்டொளி வீசி பறக்கும்; கேப்டன் லட்சியத்தை நாங்கள் நிச்சயம் அடைவோம்’’ என்றார்.

The post பிரேமலதா ஏற்றிய போது பாதியில் அறுந்து விழுந்த தேமுதிக கொடி appeared first on Dinakaran.

Related Stories: