இந்திய விமானப்படை சாகசம் ‘மறக்க முடியாததாக மாற்றியதற்கு வாழ்த்துகள்’: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு

சென்னை: சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், வெளியிட்ட டிவிட்டர் பதிவு: ‘‘முதல்வருடன் மெரினாவில் விமானப் படையின் சாகசத்தை கண்டுகளிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்திய விமானப் படையின் வான்வழி சாகசமும், துல்லியமாக பறந்த விமானங்களும் வியப்பில் ஆழ்த்தின. வீரர்களின் திறமைகளை மிக அருகில் இருந்து பார்த்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு, மறக்க முடியாததாக மாற்றியமைத்த ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்’’. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

 

The post இந்திய விமானப்படை சாகசம் ‘மறக்க முடியாததாக மாற்றியதற்கு வாழ்த்துகள்’: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: