சட்டங்கள் நவீனமயத்தால் இந்தியா வலுப்பெறும்: உச்சநீதிமன்ற பவள விழாவில் பிரதமர் பேச்சு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 75வது ஆண்டு பவள விழாவில் நேற்று கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ‘‘மூன்று புதிய குற்றவியல் நீதிச் சட்டங்கள் இயற்றப்பட்டதன் மூலம், இந்தியாவின் சட்டம், காவல் மற்றும் புலனாய்வு அமைப்புகள் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்திருக்கின்றன.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய சட்டங்களிலிருந்து புதிய சட்டங்களுக்கு மாறுவது சீராக இருப்பதை உறுதி செய்வது முக்கியம்.

இது சம்மந்தமாக, அரசு ஊழியர்களுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு பணிகளை ஏற்கனவே தொடங்கி உள்ளோம். மத்தியஸ்தம் தொடர்பான சட்டம் நீதிமன்றங்களின் சுமையை குறைக்கும், ஏனெனில் சட்டம் மாற்று தகராறு தீர்வு முறையை மேம்படுத்தும். இந்தியாவின் துடிப்பான ஜனநாயகத்தை உச்சநீதிமன்றம் வலுப்படுத்தியுள்ளது. இன்று உருவாக்கப்படும் சட்டங்கள் நாளைய இந்தியாவை மேலும் வலுப்படுத்தும்” என்றார்.

The post சட்டங்கள் நவீனமயத்தால் இந்தியா வலுப்பெறும்: உச்சநீதிமன்ற பவள விழாவில் பிரதமர் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: