ஒரே கல்லால் ஆன அதிசய காளான் பாறை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுப்பு ஊசூர் அடுத்த குருமலையில்

அணைக்கட்டு: ஊசூர் அடுத்த குருமலையில் ஒரே கல்லால் ஆன அதிசய காளான் பாறையை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சி சிவநாதபுரம் அருகே உள்ளது குருமலை மலைப்பகுதி. இந்த மலையில் குருமலை, நச்சிமேடு, வெள்ளக்கல் மலை, பள்ள கொல்லைமலை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த குருமலையில் செல்லியம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலின் அருகில் காளான் வடிவிலான ஒரே கல்லால் ஆன பாறை உள்ளது. ஆண்டுதோறும் இக்கோயில் விழா நடத்தும்போது இந்தப் பாறையின் பக்கத்தில் பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

 

The post ஒரே கல்லால் ஆன அதிசய காளான் பாறை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுப்பு ஊசூர் அடுத்த குருமலையில் appeared first on Dinakaran.

Related Stories: