‘குமரி – ராமநாதபுரம் கடலில் காற்றாலை’

தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் நடைபெற்ற 75வது குடியரசு தினவிழாவில் தலைமை இயந்திர பொறியாளர் சுரேஷ்பாபு பேசுகையில், ‘வஉசி துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அம்மோனியா உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறது. வஉசி துறைமுகம் ரூ.7055.95 கோடி செலவில் வெளிதுறைமுகம் அமைக்கும் திட்டத்தில் ஆயிரம் நீளத்துடன் கூடிய 2 சரக்கு பெட்டக முனையங்களை அமைப்பதற்கு மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழிபோக்குவரத்து அமைச்சத்தின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டம் முதல் ராமநாதபுரம் மாவட்டம் வரையிலான கடல் பகுதிகளில் காற்றாலை மின்நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அமைக்கப்பெறும் காற்றாலை நிலையங்களுக்கு தேவைப்படும் காற்றாலை இயந்திரங்கள் மற்றும் இறகுகளை கையாளுவதற்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை வஉசி துறைமுக ஆணையம் மேற்கொள்ளும்’ என்றார்.

The post ‘குமரி – ராமநாதபுரம் கடலில் காற்றாலை’ appeared first on Dinakaran.

Related Stories: