மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் உட்பட 132 நபர்களுக்கு பத்ம விருதுகளை அறிவித்தது ஒன்றிய அரசு

டெல்லி: நடப்பாண்டுக்கான பத்மவிபூஷண், பத்மபூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 132 நபர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

* கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கபட்டது.

* முன்னாள் குடியரசு துணைத் தலைவராக இருந்த வெங்கையா நாயுடுவிற்கு பத்மவிபூஷன் விருது அறிவிக்கபட்டது.

* தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி-க்கு பத்மவிபூஷன் விருது அறிவிக்கபட்டுள்ளது.

* தமிழ்நாட்டைச் சேர்ந்த பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலாவிற்கு பத்மவிபூஷன் விருது அறிவிக்கபட்டுள்ளது.

* பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியத்திற்கு பத்மவிபூஷன் விருதை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

* தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவிக்கு பத்மவிபூஷன் விருதை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

* சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜோ டி குரூஸ்-க்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கபட்டது.

* ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா-வுக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்தது ஒன்றிய அரசு.

* கோவையைச் சேர்ந்த 87 வயதான வள்ளி ஒயில் கும்மி நடனக் கலைஞர் பத்ரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கபட்டது.

* மருத்துவத்துறை சேவைக்காக ஜி.நாச்சியார், நாதஸ்வர வித்துவான் சேஷம்பட்டி சிவலிங்கம் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கபட்டது.

The post மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் உட்பட 132 நபர்களுக்கு பத்ம விருதுகளை அறிவித்தது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Related Stories: