மஞ்சூர் காவல்துறை சார்பில் பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி

 

மஞ்சூர், ஜன.26: மஞ்சூர் காவல் நிலையத்தின் சார்பில் பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் காவல் நிலையம் சார்பில் உலக பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மஞ்சூர் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா நினைவு அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து பேரணி நடைபெற்றது. மஞ்சூர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

எஸ்.ஐ.செல்வன் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தார்கள். இதில் பள்ளி மாணவிகள், போலீசார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். பள்ளி வளாகத்தில் துவங்கி மேல்பஜார், கீழ்பஜார், மணிக்கல் மட்டம் வரை சென்ற பேரணியில் பெண் சிசு கொலை தடுப்பு, பெண் பாலியல் வன்கொடுமை தடுப்பு, பெண் குழந்தை கல்வி ஊக்குவிப்பு, குழந்தை திருமண தடுப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

The post மஞ்சூர் காவல்துறை சார்பில் பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: