பூந்தமல்லி அருகே திரைப்பட நகரம் அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு..!!

சென்னை: பூந்தமல்லி அருகே திரைப்பட நகரம் அமைக்க தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் டெண்டர் கோரியது. தேசிய நெடுஞ்சாலை அருகே குத்தம்பாக்கத்தில் 152 ஏக்கரில் அதி நவீன திரைப்பட நகரம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. திரைப்பட நகரத்தில் பெரிய அளவிலான ஸ்டுடியோ, படப்பிடிப்பு அறைகள் VFX, டிவி ஸ்டுடியோ அமையவுள்ளது. பணிமனை, உணவகம், அலுவலகங்கள், டப்பிங், எடிட்டிங், கூட்ட அரங்கம், முதலுதவி அறை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் டெண்டர் கோரியது.

The post பூந்தமல்லி அருகே திரைப்பட நகரம் அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு..!! appeared first on Dinakaran.

Related Stories: