பள்ளம் தோண்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

சிவகாசி, ஜன.25: சிவகாசி மாநகராட்சியில் அனுமதியின்றி பள்ளம் தோண்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் மண்டலம் 22வது வார்டில் அமிர்தகௌரி என்பவர் தனது வீட்டின் பயன்பாட்டிற்காக செப்டிக் டேங்க் அமைப்பதற்காக உரிய அனுமதி இல்லாமல் பொது சாலையின் நடுவே பள்ளம் தோண்டியுள்ளார். பொது போக்குவரத்திற்கு இடையூறு அளிக்கும் வகையில் பள்ளம் தோண்டியதாக ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில் வீட்டின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நகர் நல அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

The post பள்ளம் தோண்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: