காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் கல்வெட்டு படி எடுக்கும் பணி: தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை படி எடுக்கும் பணியை தொல்லியல் துறை அதிகாரி லோகநாதன் உள்பட 3 அதிகாரிகள் ஆய்வு செய்தனர். காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் கோயில் உள்ளது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோயிலில், தமிழக தொல்லியல் துறை அதிகாரி லோகநாதன் உள்பட 3 அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, கல்வெட்டுகளை படி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஏகாம்பரநாதர் உட்பிரகாரம், பெரிய நந்தி பின்புறம், கோசலை செல்லும் வழி என தரையில் இருக்கும் ஆவணங்களை படி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ராஜராஜ சோழன், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு கொடுத்த பொருட்கள் மற்றும் கோயிலுக்கு செய்த திருப்பணிகள் அடங்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும், ராஜராஜ சோழன் கோயிலுக்கு வழங்கிய முத்து வடம் உள்ளிட்ட பொருட்களின் விபரமும் உள்ளது.

இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரி லோகநாதன் கூறுகையில், \”ஏகாம்பரநாதர் கோயிலில் கல்வெட்டு இருப்பது கூட தெரியாமல், தரையில் மறைந்துக்கிடந்த கல்வெட்டை எடுத்து பார்த்ததில், ராஜராஜ சோழன் மற்றும் தேவர் அடியார்கள் கோயிலுக்கு செய்த திருப்பணிகள் பற்றிய விவரங்கள் அனைத்து தெரியவந்துள்ளது. இதனால், கோயிலுக்கு உள்ளே முக்கிய இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாய்வு தொடர்ந்து நடைபெறும்.
மேலும், தரையில் உள்ள கல்வெட்டுகளை பாதுகாக்க கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம்” என்றார்.

The post காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் கல்வெட்டு படி எடுக்கும் பணி: தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: