குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தமிழக ஆளுநரின் தேநீர் விருந்து: காங், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பு

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழாவன்று தமிழக ஆளுநர் மாளிகையில் ஆளுநர் சார்பில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இந்தநிலையில் நாடு முழுவதும் குடியரசு தினவிழா கோலாகலமாக நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அன்று மாலை நடக்கிறது. இதில் அனைத்து கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்குமாறு ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழக மக்களுக்கு எதிராகவும், ஆளுங்கட்சிக்கு எதிராகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மேலும் ஆளுங்கட்சியிடம் மோதல் போக்கை தொடர்ந்து வருகிறார். இந்தநிலையில் வரும் 26ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை கூறுகையில், மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார். ஆளுநர் குறித்து ஜனாதிபதியிடம் புகார் அளிப்போம் என்றார். இதேபோல் ஆளுநரின் தேநீர் விருந்தை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகளும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக கூட்டணியில் உள்ள 4 கட்சிகள் புறக்கணித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தமிழக ஆளுநரின் தேநீர் விருந்து: காங், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: