புரோ கபடி லீக்: பெங்களூர் புல்ஸை புரட்டி எடுத்த தமிழ் தலைவாஸ்

ஐதராபாத் : 10வது சீசன் புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் – பெங்களூரு புல்ஸ் அணிகள் இடையேயான 82வது லீக் போட்டி நடைபெற்றது. இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால்தான் பிளே – ஆப் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கியது. ஆரம்பத்தில் இருந்தே தமிழ் தலைவாஸ் அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் பாதி ஆட்டத்திலேயே தமிழ் தலைவாஸ் 25 – 14 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. தமிழ் தலைவாஸ் அணியின் நட்சத்திர ரெய்டர் நரேந்தர் 15 ரெய்டுகளில் 10 ரெய்டுகளில் மொத்தம் 14 புள்ளிகள் எடுத்தார். செய்தார். 2 முறை மட்டுமே அவர் பிடிபட்டார். அவருக்கு பக்கபலமாக அஜின்க்யா பவார் 17 ரெய்டுகளில் 11 புள்ளிகள் பெற்றார். ஆட்ட நேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 45 புள்ளிகளும், பெங்களூரு புல்ஸ் 28 புள்ளிகளும் பெற்றன.

இதன் மூலம் தமிழ் தலைவாஸ் 17 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் அதே 10வது இடத்தில் நீடிக்கிறது. இனி வரும் போட்டிகளில் வெல்வதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி படிப்படியாக புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதுடன் பிளே ஆப் சுற்று கனவையும் எட்ட வாய்ப்பு உள்ளது. இதைத்தொடர்ந்து நடந்த 83வது லீக் போட்டியில் புனேரி பால்டன்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய புனேரி பல்டான் 34-24 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸை வீழ்த்தியது. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 84வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கும் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியுடன் பெங்கால் வாரியர்ஸ் அணி மோதுகிறது. 9 மணிக்கு நடைபெறும் 85வது லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ்-அரியானா டீலர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

The post புரோ கபடி லீக்: பெங்களூர் புல்ஸை புரட்டி எடுத்த தமிழ் தலைவாஸ் appeared first on Dinakaran.

Related Stories: