லக்னோ: அயோத்திக்கு திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் வருகை தந்துள்ளனர். ராமர் கோயில் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். மேலும், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஜாக்கி ஜெராஃப், சிரஞ்சீவி உள்ளிட்டோர் வந்துள்ளனர். நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் அயோத்தியில் குவிந்தனர்.