மணிப்பூர், திரிபுரா, மேகாலயா மாநிலங்கள் உருவான நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், திரிபுரா, மேகாலயா மாநிலங்கள் கடந்த 1971ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி வடகிழக்கு பிராந்தியம்(மறுசீரமைப்பு) சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டன. 1972ம் ஆண்டு இந்த 3 மாநிலங்களுக்கும் முழு மாநில தகுதி வழங்கப்பட்டது. இதையடுத்து ஆண்டுதோறும் ஜனவரி 21ம் தேதி மணிப்பூர், திரிபுரா, மேகாலயா மாநில நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று 52வது மாநில தினத்தை 3 மாநிலங்களும் கொண்டாடின. இதையொட்டி 3 மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தன் ட்விட்டர் பதிவில், “மணிப்பூர் மாநில மக்களுக்கு என் நல்வாழ்த்துகள். மணிப்பூரின் வளர்ச்சிக்காக நான் தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

“திரிபுரா மாநிலத்தின் சிறப்புமிக்க வரலாறு மற்றும் செழுமையான பாரம்பரியத்தை இந்த நாள் கொண்டாடட்டும். திரிபுரா மக்களுக்கு செழிப்பும், நல்லிணக்கமும் திகழட்டும்” என்று வாழ்த்தியுள்ளார். மற்றொரு பதிவில், “ வரும் காலங்களில் மேகாலயா முன்னேற்றங்களின் புதிய உச்சத்தை அடையட்டும்” என்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post மணிப்பூர், திரிபுரா, மேகாலயா மாநிலங்கள் உருவான நாள்: பிரதமர் மோடி வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: