டெல்லி பாபர் சாலை பெயரை சேதப்படுத்திய இந்து அமைப்பு

புதுடெல்லி: டெல்லியில் பாபர் சாலையின் பெயரை மாற்ற வேண்டும் என்று வலதுசாரி அமைப்பான இந்து சேனா கோரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில் பாபர் சாலை பெயர் பலகையை அந்த அமைப்பினர் நேற்று சேதப்படுத்தினார்கள். அதன் மீது அயோத்தி சாலை என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து போலீசில் புகார் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post டெல்லி பாபர் சாலை பெயரை சேதப்படுத்திய இந்து அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: