நுகர்வோர் சேவை மதிப்பீட்டில் தமிழக மின்வாரியம் தொடர்ந்து முன்னேற்றம்: ஒன்றிய அரசு தகவல்

சென்னை: மின் பகிர்மான நிறுவனங்களின் நுகர்வோர் சேவை தொடர்பாக ஆராய்ந்து, திட்டமிட்டு, கண்காணிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஒன்றிய எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில் நடந்தது.  இந்த கூட்டத்தில் மின் பகிர்மான நிறுவனங்களின் மின் நுகர்வோர் சேவை மதிப்பீட்டின் 3வது ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் மொத்தம் உள்ள 62 மின் பகிர்மான நிறுவனங்களில் உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் உள்ள நிறுவனங்கள் முதலிடமான ஏ+ இடத்தை பிடித்துள்ளன. இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஏ தரவரிசை பெற்றுள்ளது. கடந்த முறை பி+ இடத்தை பெற்ற நிலையில் இம்முறை ஒரு இடம் முன்னேறியுள்ளது. இந்த அறிக்கை மின் பகிர்மான நிறுவனங்களிடையே ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தும், அவர்களின் நுகர்வோர் சேவையை மேம்படுத்த உதவும் என எரிசக்தித்துறையினர் தெரிவித்தனர்.

The post நுகர்வோர் சேவை மதிப்பீட்டில் தமிழக மின்வாரியம் தொடர்ந்து முன்னேற்றம்: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: