காஞ்சி குமரகோட்டம் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை வசூல் ₹23 லட்சம்

காஞ்சிபுரம், ஜன.20: காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் உண்டியல்கள் நேற்று முன்தினம் திறந்து எண்ணப்பட்டன. இதில், ₹23 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்ரமணியர் முருகன் கோயிலில் 8 உண்டியல்கள் உள்ளன. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், சாமி தரிசனம் செய்து, இந்த உண்டியல்களில் காணிக்கைகளை செலுத்தி செல்கின்றனர். இந்த 8 உண்டியல்களின் காணிக்கைகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இக்கோயிலில் செயல் அலுவலர் தியாகராஜன் தலைமையில், செயல் அலுவலர்கள் முத்துலட்சுமி, அமுதா ஆகியோர் மேற்பார்வையில், உண்டியல்கள் நேற்று முன்தினம் திறந்து எண்ணப்பட்டன. இப்பணியில் கோயில் ஊழியர்கள், சமூக அமைப்பினர் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவ – மாணவிகள் ஈடுபட்டனர். இதில், ₹23 லட்சத்து 60 ஆயிரத்து 938, 30 கிராம் தங்கமும், 708 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.

The post காஞ்சி குமரகோட்டம் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை வசூல் ₹23 லட்சம் appeared first on Dinakaran.

Related Stories: