ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை வீழ்த்த காங்கிரசில் இணைந்த ஷர்மிளா சித்தப்பா மகளுக்கும் அழைப்பு: கடப்பா எம்.பி. தொகுதியில் வாய்ப்பு

திருமலை: ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகனை வீழ்த்த அவரது தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஷர்மிளாவின் சித்தப்பாவும் முன்னாள் அமைச்சருமான விவேகானந்தா 2019ம் ஆண்டு கொலை செய்யப்பட்டதில் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது மகள் சுனிதா தந்தை கொலையில் குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் வரை சென்று சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி பெற்றார். சுனிதா தந்தை கொலைக்கு நீதி கேட்டு போராடும் நிலையில், ஆரம்பத்தில் இருந்து ஷர்மிளா ஆதரவு கொடுத்து வந்தார். தற்போது ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஷர்மிளா சுனிதாவை காங்கிரஸ் கட்சியில் இணையும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் கடப்பா எம்பியாக போட்டியிடவும் கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே சுனிதாவை தங்கள் கட்சியில் சேருமாறு தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் சுனிதா தனது அரசியல் நுழைவு குறித்து தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

The post ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை வீழ்த்த காங்கிரசில் இணைந்த ஷர்மிளா சித்தப்பா மகளுக்கும் அழைப்பு: கடப்பா எம்.பி. தொகுதியில் வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: