கொரோனா வைரஸுக்கு எதிராக 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மதுபானங்களுக்கு 10% தள்ளுபடி : மாவட்ட நிர்வாகம் அசத்தல்!!

போபால் : இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசி போட்டவர்களுக்கு மதுபானம் வாங்குவதில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மக்கள் எல்லாம் கொரோனா தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர். இந்தியாவில் 117 கோடிக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். இந்நிலையில் இன்னும் சிலர் பல்வேறு காரணங்களுக்காக கொரோனா தடுப்பூசியை போடாமல் தாமதித்து வருகின்றனர். இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது. ஆனால் மத்திய மாநில அரசுகள் ஒவ்வொரு குடிமகனையும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.இந்த நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டசூர் மாவட்ட நிர்வாகம், கொரோனா வைரஸுக்கு எதிராக 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மதுபானங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள மண்டசூர் மாவட்ட கலால் அதிகாரி அனில் சச்சன், இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அதற்கான சான்றிதழைக் கொண்டு வந்தால், மதுபானம் வாங்குவதில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் சிதாமாவ் பாதக், புனியாகெடி மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மதுபானக் கடைகளில் மக்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்….

The post கொரோனா வைரஸுக்கு எதிராக 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மதுபானங்களுக்கு 10% தள்ளுபடி : மாவட்ட நிர்வாகம் அசத்தல்!! appeared first on Dinakaran.

Related Stories: