திருப்பூரில் 611 தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள்: மேயர் தினேஷ்குமார் வழங்கினார்

 

திருப்பூர், ஜன.13: திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது. இந்த 60 வார்டுகளும் நிர்வாக காரணங்களுக்காக 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி 1வது மண்டலம் முதல் 4வது மண்டலம் வரை உள்ள பகுதிகளில் பணிபுரியும் 611 மாநகராட்சி நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு கோ.ஆப் டெக்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.14.34 லட்சம் மதிப்பில் சீருடைகள் மற்றும் கதர் கிராம தொழில்கள் திருப்பூர் நிறுவனத்திடம் இருந்து ரூ.2.20 லட்சம் மதிப்பில் காலணிகள் வாங்கப்பட்டு வழங்கப்பட்டது.

இதனை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் வழங்கினார். இதில் கமிஷனர் பவன்குமார் மற்றும் துணை மேயர் பாலசுப்பிரமணியம்,மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன்,கோவிந்தராஜ்,உமா மகேஸ்வரி,துணை ஆணையர்கள் சுந்தர்ராஜ்,சுல்தானா,உதவி ஆணையர் வினோத் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

The post திருப்பூரில் 611 தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள்: மேயர் தினேஷ்குமார் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: