எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் பாரம்பரிய பொங்கல் விழா: மாணவ, மாணவிகள் உற்சாகம்

 

மதுரை, ஜன. 13:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை எஸ்ஆர்எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடபட்டது. கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்லூரி முதல்வர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி தமிழர்களின் கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாக அமைந்தது. இந்த விழாவில் மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைகளில் பங்கேற்றனர்.

பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வகுப்புகளின் மாணவர் பிரதிநிதிகளால், பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான பானை உடைத்தல், கரும்பு சாப்பிடுதல், கயிறு இழுத்தல், எலுமிச்சை மற்றும் கரண்டி, ஸ்லோ சைக்கிள் ரேஸ், ரங்கோலி, பாப் தி பலூன், லக்கி கார்னர், இசை நாற்காலி போன்றவை நடத்தப்பட்டன. இவை பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்நிகழ்வில் மாணவிகள் சர்க்கரைப் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கினர்.

இது கொண்டாட்டத்துடன் கல்லூரியில் சமூக ஒற்றுமை உணர்வை வளர்க்கும் வகையில் இருந்தது. எஸ்ஆர்எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.துரைராஜ் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றதாக மகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் இதில் முழு மனதுடன் பங்கேற்ற மாணவர்களின் உற்சாகத்தை பாராட்டினார்.

இந்த பொங்கல் விழா மாணவர்களின் கலாச்சார வேர்களை நிலைநிறுத்துவதற்கான கல்லூரியின் முயற்சியை வெளிப்படுத்தியது. அத்துடன் சமூகத்திற்குள் உள்ள பன்முகத்தன்மையை கல்லூரி தரப்பில் எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. இந்நிகழ்வு மகிழ்ச்சி மட்டுமின்றி நமது கலாச்சாரத்தின் செழுமையை நினைவூட்டுவதாக அமைந்ததாக மாணவ, மாணவிகள் கூறினர்.

The post எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் பாரம்பரிய பொங்கல் விழா: மாணவ, மாணவிகள் உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: