தமிழ்நாடு முழுவதும் கல்வி நிலையங்களில் சமத்துவப் பொங்கல் விழா: மாணவர்கள் ஆடல், பாடலுடன் பொங்கல் வைத்து கொண்டாடட்டம்!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாணவர்கள் ஆடல், பாடலுடன் பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை லயோலா கல்லூரி மேலாண்மை நிறுவனத்துறை சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பேராசிரியர்கள் மற்றும மாணவர்கள் ஆட்டம், பாட்டத்துடன் மாட்டுவண்டியில் ஊர்வலமாக வந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களும் தமிழகர்களின் பாரம்பரிய உடையான வெட்டி சேலை அணிந்து பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 3,000க்கும் அதிகமான மாணவர்கள் குத்தாட்டம் போட்டு சமத்துவ பொங்கல் திருவிழாவை கொண்டாடினர். பாட்டு, நடனம், சிலம்பம் என கலை நிகழ்ச்சிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் வண்ண கோலங்கள் மூலம் அரசின் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொங்கல் விழாவை முன்னிட்டு காளைகள் மூட்டப்பட்ட மாட்டுவண்டியில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பயணம் செய்தார்.

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் சேர்ந்து எம்.எல்.ஏ. ஷாநவாஸ் மண்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினார். தேனி கனரா வங்கி கிளையில் பணிபுரியும் வெளிமாநில ஊழியர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வெட்டி, சேலை அணிந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

The post தமிழ்நாடு முழுவதும் கல்வி நிலையங்களில் சமத்துவப் பொங்கல் விழா: மாணவர்கள் ஆடல், பாடலுடன் பொங்கல் வைத்து கொண்டாடட்டம்!! appeared first on Dinakaran.

Related Stories: