தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் 12 அடி உயர துலாபாரம் அமைப்பு

திண்டுக்கல், ஜன. 12: திண்டுக்கல் அருகே தாடிக்கொம்புவில் பிரசித்தி பெற்ற சௌந்தரராஜா பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ்பாலாஜியின் சீரிய முயற்சியில் கோயில் கொடி கம்பம் அருகே 12 உயரத்தில் ஸ்ரீவாரி துலாபாரம் நேற்று ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் துலாபாரத்திற்கு கோயில் பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அடுத்தபடியாக இங்கு தான் மிக உயரமான துலாபாரம் அமைக்கப்பட்டுள்ளது.

எடைக்கு எடை கற்கண்டு, வெல்லம், வாழைப்பழம், திராட்சைப்பழம், பேரீச்சைப்பழம், உள்ளிட்ட பழ வகைகள், ஏலக்காய், பச்சரிசி, சில்லரை நாணயங்கள், நவதானியங்கள் ஆகியவற்றை பெருமாளுக்கு பக்தர்கள் துலாபாரம் மூலம் நேர்த்திக்கடன் செலுத்தலாம் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் விக்னேஷ் பாலாஜி, உறுப்பினர்கள் வாசுதேவன், கேப்டன் பிரபாகரன், சுசீலா ராமானுஜம், செயல் அலுவலர் முருகன், பட்டாச்சாரியார் ராமமூர்த்தி, ரமேஷ் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் 12 அடி உயர துலாபாரம் அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: