பொங்கல் விழாவை முன்னிட்டு நொய்யல் ஆற்றை தூர்வாரும் பணி தீவிரம்

 

திருப்பூர், ஜன.12: திருப்பூர் மாநகராட்சி, நொய்யல் பண்பாட்டு கழகம், ஜீவநதி நொய்யல் சங்கம் ஆகியவை சார்பில் பொங்கல் விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நொய்யல் பண்பாட்டு கழகம் சார்பில் வருகிற 15ம் தேதி மாலை 4 மணிக்கு சமத்துவ பொங்கல் மற்றும் சமத்துவ கும்மி ஆட்டம் நடைபெறுகிறது. இதுபோல் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவி பாரதிக்கு பாராட்டு விழா, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. வருகிற 16ம் தேதி மாலை 4.30 மணிக்கு பறை இசை, பரதநாட்டியம், செண்டை மேளம், கிராமிய இசை கச்சேரி, களரி மற்றும் பல நடக்கிறது.

ஜீவநதி நொய்யல் சங்கம், நிட்மா, திருப்பூர் மாநகராட்சி சார்பில் வருகிற 17ம் தேதி காலை பொங்கல் விழா நடக்கிறது. காலை 6 மணிக்கு மங்கள இசை மற்றும் 1008 பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, பெருஞ்சலங்கை ஆட்டம், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு கிராம இசை நிகழ்ச்சி, பள்ளி மாணவமாணவிகள் கலை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது. இந்நிலையில் பொங்கல் விழாவை முன்னிட்டு நொய்யல் ஆற்றை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

The post பொங்கல் விழாவை முன்னிட்டு நொய்யல் ஆற்றை தூர்வாரும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: