பாராக மாறும் திருப்பூர் ரயில் நிலையம் கண்காணிப்பை தீவிரப்படுத்த பயணிகள் கோரிக்கை

 

திருப்பூர், அக். 16: தொழில் நகரமான திருப்பூரில் ரயில் போக்குவரத்து பிரதானமாக இருந்து வருகிறது. வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாது உத்தரப்பிரதேசம், பீகார், குஜராத், டெல்லி, ஒடிசா, பாட்னா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடியவர்களின் முக்கிய போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. இதன் காரணமாக திருப்பூர் ரயில் நிலையத்திற்கு தினந்தோறும் சிறுவர், சிறுமியர், பெண்கள், முதியவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

ரயில் நிலையத்தை அழகுப்படுத்தும் பணிகளும் தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெளியூர்களில் இருந்து ரயில் நிலையத்திற்கு வரும் சில நபர்கள் ரயில் நிலையத்தில் அமர்ந்து மதுபானம் அருந்தும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மது போதையில் ரயில் நிலையத்திலேயே படுத்து உறங்கும் இவர்களால் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதற்கு முன்பாக ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீசாரும் ரயில் நிலையத்தின் கண்காணிப்பு பணியை தீவிர படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பாராக மாறும் திருப்பூர் ரயில் நிலையம் கண்காணிப்பை தீவிரப்படுத்த பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: